பிரசாந்த் கிஷோர் த.வெ.க. ஆலோசகராக செயல்படுவதில் இருந்து விலகல்!

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரஷாந்த் கிஷோர் பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியானது. அதேசமயம் தமிழக வெற்றி கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியிலும் பிரஷாந்த் கிஷோர் கலந்துகொண்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் அரசியல் வியூகங்களை மக்கள் மத்தியில் எடுத்து செல்ல பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், த.வெ.க. ஆலோசகராக செயல்படுவதில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதால் தவெக ஆலோசகராக செயல்பட முடியவில்லை. ஆகவே தமிழக வெற்றிக்கழகத்தின் ஆலோசகராக செயல்படுவதில் இருந்து சிறிது காலம் விலகுகிறேன். தவெக தலைவர் விஜய்யின் ஆலோசகராக செயல்படுவது குறித்து நவம்பருக்கு பிறகு முடிவெடுப்பேன் என பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!