இறந்த தாயின் உடலை வைத்து பூஜை.. மகனும் தூக்கிட்டு தற்கொலை.. குழம்பிய காவல்துறை!

 
நரபலி

காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம், பெரம்பலூர் மாவட்டம், முத்து நகர் ரோவர் ஆர்ச் சாலையில் உள்ள செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் ​​70 வயது மூதாட்டியின் சடலமும், 35 வயது மதிக்கத்தக்க ஆணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

தற்கொலை

மேலும், மூதாட்டியின் சடலத்தின் மீது மஞ்சள், குங்குமம்,   எலுமிச்சை , ஆரஞ்சு பழம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த தாயின் உடலுக்கு அவர் மட்டும் பூஜை செய்தாரா அல்லது வேறு நபர்கள் சடலத்தை வைத்து பூஜை செய்தார்களா? சந்தேகிக்கிறார்கள்.

போலீஸ்

மேலும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், மனவேதனையால் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறியதாவது: ஸ்ரீராம் கடந்த சில நாட்களாக கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web