தண்ணீர் குடிச்சுக்கவா... பிரக்ஞானந்தா அலப்பறை... வைரல் வீடியோ!

 
பிரக்ஞானந்தா

 தமிழகத்தின்  செஸ் விளையாட்டின் இளம் வீரர்  பிரக்ஞானந்தா சில நாட்களுக்கு முன்பு நார்வேயில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை  செஸ் விளையாட்டில் தோற்கடித்தார். அதை தொடர்ந்து உலகின் நம்பர் 2 வீரரான ஃபேபியானோ கருவானாவுடனான மற்றொரு போட்டியில் அவரையும் வீழ்த்தியுள்ளார். 2023 செஸ் உலக கோப்பையில் கார்ல்சனிடம் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் தற்போது அவரை வெற்றி பெற்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.அவர் மீது ஒரு எதிர்பார்ப்பும் உலக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றி பிரக்ஞானந்தாவுக்கு   ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்ததோடு மட்டுமல்லாமல்,FIDE தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அவர் இடம் பெற்றுள்ளார்.  இதனால் சர்வதேச அளவில்  கவனம் பெற்றுள்ளார்.


இந்நிலையில்  பிரக்ஞானந்தா மேடையில் நேர்காணல் நிகழ்வு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவர் தண்ணீர் குடிக்கும் புகைப்படத்தை காண்பித்து ஏன் விளையாடும் போது தண்ணீர் குடித்தீர்கள் என கேட்ட கேள்விக்கு பிரக்ஞானந்தா மிகவும் எளிமையாக அப்போது எனக்கு தாகமாக இருந்தது என தெரிவித்தார். அதற்கு தொகுப்பாளர் உங்களுக்கு தாகமாக இருந்தது எனக் கூறுகிறார்கள்,

பிரக்ஞானந்தா வெற்றி

ஆனால் உங்களுக்கு எதிரே விளையாடுபவர்கள்  தண்ணீர் பாட்டிலை தொடும்போது பதறுகிறார்கள் என தெரிவித்தனர். இதனால் அரங்கமே சிரிக்கிறது.  பிரக்ஞானந்தா இப்போது நான் கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொள்ளலாமா என  விளையாட்டாக கேட்க அரங்கமே சிரித்து கைதட்டி அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web