பகீர்... கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டு கர்ப்பிணி பலி!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் வீரமணி – ரமணா. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரமணா கர்ப்பமானர். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 3வது குழந்தையை கலைக்க வேண்டாம் என முடிவு செய்தனர். இதனையடுத்து அவர் கருவை கலைக்க இ மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
இதனால் ரமணாவுக்கு அதிகப்படியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.மாத்திரை சாப்பிட்டபின் அவரது கருவில் வளர்ந்த சிசு உயிரிழந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின் அவரது கருவிலிருந்து குழந்தை அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்தும் அவருக்கு ரத்தப்போக்கு நிற்கவே இல்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் 7 மாத கருவை கலைக்க மாத்திரை கொடுத்த மருத்துவர் தேன்மொழி, சக்தி தேவி, வெற்றி செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!