இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணியை கட்டி வைத்து எரித்த கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!

 
 பிங்கி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் ஆத்திரம் காரணமாக ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவியை கட்டிலில் கட்டி வைத்து உயிருடன் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட சுக்தேவ், தனது மனைவி பிங்கியைத் தாக்கி, படுக்கையில் கட்டிவைத்து, வெள்ளிக்கிழமை தம்பதியினரிடையே கடுமையான வாக்குவாதத்தைத் தொடர்ந்து தீ வைத்துவிட்டார்.

பிங்கி ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அமிர்தசரஸின் ரேயா பகுதியில் உள்ள புலேட் நங்கல் கிராமத்தில் உள்ள தம்பதிகளின் வீட்டில் வெள்ளிக்கிழமை இந்த கொடூரமான சம்பவம் நடந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி விவரங்களை அளித்த அதிகாரி கூறுகையில், தம்பதியினருக்கு இடையேயான உறவில் விரிசல் இருந்ததாகவும், பல்வேறு பிரச்னைகளில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறினார். வெள்ளிக்கிழமையன்று கணவன்-மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது, மேலும் ஆத்திரத்தில் சுக்தேவ், பிங்கியை தங்கள் வீட்டின் முன் முற்றத்தில் கட்டிலில் கட்டி தீ வைத்து எரித்ததாக அவர் கூறினார்.

இரட்டைக் குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பாதிக்கப்பட்ட பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் சுக்தேவ், கொடூரமான செயலைச் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டுத் தப்பியோடி தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். சுக்தேவ் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடித்து விரைவில் கைது செய்ய தேடுதல்கள் நடந்து வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்ப்பிணி மனைவி மற்றும் பிறக்காத குழந்தைகளை இவ்வளவு கொடூரமான முறையில் ஒருவர் ஏன் கொலை செய்ய வேண்டும் தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் அதிர்ச்சிகரமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!