முன்விரோதம்.. கொலை செய்ய திட்டம் தீட்டிய கும்பல்.. முன்பே தடுத்து நிறுத்திய போலீசார்!
வடசென்னையின் பிரபல தாதா நாகேந்திரன் வேலூர் சிறையில் குற்றவாளியாக அடைக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவுடி நாகேந்திரனின் சகோதரர்களான ரவுடி ரமேஷ், முருகன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக மற்றொரு ரவுடியை கொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் ரமேஷ், முருகன் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் இருவரது வீட்டிலும் 51 கத்திகள், 2 இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முன்பகை காரணமாக கொடுங்கையூரை சேர்ந்த பி பிரிவு ரவுடி மோகன்தாஸ் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கொல்ல திட்டமிட்ட ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் ரமேஷ், முருகன், அவரது சகோதரி மகன்கள் தம்பி துரை, தமிழழகன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ரவுடி முருகன் மீது 33 வழக்குகள் உள்ளதாகவும், அவர் ஏ கேடகரி ரவுடி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை கொல்ல திட்டமிட்டுள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் குறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தலைமறைவான மோகன்தாசை கொடுங்கையூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் பி-பிரிவு குற்றவாளி என்பதும், இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ரவுடி மோகன்தாசை கொல்ல ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் ரமேஷ் மற்றும் முருகன் திட்டமிட்டது போல், ரவுடி மோகன்தாசையும் கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது.
ரவுடி மோகன்தாஸ் வடசென்னை பெண்ணான “இல்லா மல்லி” என்பவரின் மகன் என்பதும், தம்பியை கொன்றதற்கு பழிவாங்க நாகேந்திரனின் சகோதரர்களை கொல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதேபோல் நாகேந்திரனின் மற்றொரு தம்பி பிர்லா போஸ் கொலைக்கு பழிவாங்க ரமேஷும், முருகனும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 1999 ஆம் ஆண்டு, ரவுடி நாகேந்திரனின் தம்பி பிர்லா போஸ் பெண் தாதா இல்லா மல்லி பிரிவினரால் கொல்லப்பட்டார், அதைத் தொடர்ந்து ரவுடி நாகேந்திரன் இல்லா மல்லியின் கோஷ்டியைச் சேர்ந்த ஸ்டான்லி சண்முகனைக் கொன்றார். இந்த விரோதம் இரு தரப்பினருக்கும் முன்பகையாக மாறியது. கடைசியாக, 2020ல், பெண் தாதா இல்லாவின் மகன் விஜய் தாஸ் மல்லி, ரவுடி நாகேந்திரன் கோஷ்டியால் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்குப் பழிவாங்கக் காத்திருந்த பெண் தாதா 'இல்லா மல்லி' இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்து போனார். இந்த விவகாரத்தில் ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் ‘இல்லா மல்லி’ குடும்பத்தில் எஞ்சியிருந்த மோகன்தாசை கொல்ல திட்டமிட்டு, அண்ணன் விஜய்தாஸ் கொலைக்கு பழிவாங்க அவரது தம்பி மோகன்தாஸ் திட்டமிட்டு, இரு தரப்பினரும் காத்திருந்தனர். இதையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!