ஜூன் 10ல் பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில முதல்வராக பதவியேற்பு!

 
சிக்கிம்

 இந்தியாவில் நடந்து முடிந்த 18 வது  மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில்  ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று  பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதனையடுத்து  சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் ஜூன்9ம் தேதி மீண்டும் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன் 9ம் தேதி மோடி  பதவியேற்க உள்ளதால் அதில் என்டிஏ ஆதரவு கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் பிரேம் சிங் தமாங் கலந்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பதவியேற்பு விழா ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோடி
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா  சட்டமன்றக் கட்சிக் கூட்டம், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான மின்டோக்காங்கில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது.  இந்த கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்கேஎம் எம்எல்ஏக்கள், கட்சியின் ஆதரவை மோடிக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிவிட்டனர்.


இது குறித்து பேசிய  பிரேம் சிங் தவாங், "மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பிரதமர் மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்கள் வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றம்  மற்றும் செழுமைக்காக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, தேசிய ஜனநாயகக் கூட்டணியை தொடர்ந்து ஆதரிக்கும். இந்தியாவின் பிரதமராக 3 வது முறையாக மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவில் நான் கலந்து கொள்ள உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.  தனக்கும், எஸ்.கே.எம்-க்கும் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்த சிக்கிம் மக்களுக்கு நன்றிகள் பல என தெரிவித்துள்ளார்.  இதற்காக பிரேம் சிங் தமாங் நாளை ஜூன் 8 ம் தேதி புதுடெல்லிக்குப் புறப்படுவார்.  "தமங் மற்றும் அவரது அமைச்சர்கள் குழு ஜூன் 10 ம் தேதி பால்ஜோர் மைதானத்தில் பதவியேற்பார்கள்" என கட்சி சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web