ஒரே நாளில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது யார்? - பிரேமலதா ஆவேசம்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சனைகளை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் போராடுகின்ற போது அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்படுகின்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் இருக்கின்ற நிலையில், திமுகவுக்கு மட்டும் இன்றைக்கு ஆர்ப்பாட்டம் நடத்த யார் அனுமதி கொடுத்தது?
எதிர்க்கட்சியினரின் குரல்வளையை நசுக்குகின்ற வகையில், ஜனநாயகத்திற்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க கூடாது, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது, அமைதி பேரணி நடத்தக்கூடாது, ஆனால் திமுகவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி யார் வழங்கினர். உங்கள் மீது யார் வழக்கு பதிவு செய்வது? இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம்.
மேலும், மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற மக்களுக்கு இந்த அரசு அனுமதி மறுக்கின்றது. ஊராட்சிகளை பேரூராட்சியுடனும், நகராட்சியுடனும், மாநகராட்சியுடனும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை முன்வைக்கும் பொதுமக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டு, ஆனால் திமுக நடத்துகின்ற ஆர்ப்பாட்டதிற்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்கின்றனர், இது எந்த வகையில் நியாயம்.
திமுகவுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? என்ற கேள்விக்கு திமுக அரசும், முதலமைச்சர் அவர்களும் நிச்சயமாக பதில் சொல்ல வேண்டும். அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக திமுகவின் ஆட்சி இருக்கிறது. இதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!