2026 தேர்தல் கூட்டணி முடிவு ஜனவரி 9ம் தேதிக்குள் அறிவிப்போம் ... பிரேமலதா விஜயகாந்த் பளிச்!
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 13) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, மாநில மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டணியைப் பற்றி பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் கூட்டணியை அறிவிக்கலாம் அல்லது சூழ்நிலைக்கேற்ப தள்ளிப்போகலாம். நாங்கள் இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்,” என்று உறுதியுடன் தெரிவித்தார். மேலும், கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

அதிகாரப்பூர்வ தகவலின்படி, பிரேமலதா விஜயகாந்த் மூன்றாம் கட்ட மாநில சுற்றுப்பயணத்தை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்க உள்ளார். இதில் மாவட்டச் செயலாளர்களின் செயல்திறன் மதிப்பீடு, தேர்தல் திட்ட திருத்தங்கள் மற்றும் மாநாட்டிற்கான மக்களை ஒருங்கிணைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இது பிரேமலதா பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால், கடலூரில் நடைபெறும் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
