பிரேம்ஜிக்கு ஜூன் 9ம் தேதி கல்யாணம்... இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான வேண்டுகோள்!

 
பிரேம்ஜிக்கு ஜூன் 9ம் தேதி கல்யாணம்... இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான வேண்டுகோள்!

என் தம்பி பிரேம்ஜிக்கு வரும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடைப்பெற உள்ளது. அனைவரும் இருந்த இடத்தில் இருந்தே வாழ்த்துங்க. நெருங்கிய உறவினர்கள்,நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்’ என்று இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட பிரேம்ஜி தனது 44வது வயதில் இந்து என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமணப் பத்திரிக்கை இணையத்தில் கசிந்து வைரலானது. 

இதனையடுத்து, பிரேம்ஜி திருமணம் பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு இணையத்தில் கலகலப்பான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. வரும் ஜூன் 9ம் தேதி நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மா ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். 

பிரேம்ஜிக்கு ஜூன் 9ம் தேதி கல்யாணம்... இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான வேண்டுகோள்!

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்தத் திருமணத்தை எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் இந்தத் திருமணப் பத்திரிக்கையை இணையத்தில் பகிர்ந்துவிட்டார். பத்திரிக்கை எப்படி வைரல் ஆனதோ அதுபோல, மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்ற விஷயமும் வைரலாகி இருக்கிறது. அது உண்மை இல்லை. 

எங்கள் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்துங்கள். திருமணம் முடிந்ததும் புகைப்படங்களைப் பகிர்கிறேன். திருமண வரவேற்பில் நிச்சயம் அனைவரையும் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார். இதோடு விஜயின் 'GOAT' பட அப்டேட்டும் அடுத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web