நண்பர்கள் புடைசூழ பிரேம்ஜி அமரன் திருமணம்.. வைரலாகும் புகைப்படங்கள்!

 
பிரேம்ஜி

தமிழ் திரையுலகில் பல வருடங்களாக முரட்டு சிங்கிளாக வலம் வருபவர் பிரேம்ஜி. பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான இவர், அவரது அனைத்து படங்களிலும் தவறாமல் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பல பெரிய ஹீரோ படங்களில் துணை நடிகராகவும், பாடகராகவும் பணிபுரிந்து வருகிறார். "பிரேம்ஜிக்கு திருமணம்" என்று கேட்டதும் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இதனால், பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்கள் கேட்கும் முக்கியக் கேள்வி “பிரேம்ஜிக்கு எப்போது திருமணம்” என்பதுதான். சில தினங்களுக்கு முன் இணையதளத்தில் பிரேம்ஜியின் திருமண அழைப்பிதழ் வைரலானது. பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்.

அவர்களுக்கு இன்று  காலை திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் பிரேம்ஜி பட்டு வேஷ்டி அணிந்து அசத்தியுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தத்தில் சென்னை 600028 நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web