ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் உற்சாக வரவேற்பு!

 
மோடி ரஷ்யா

 இந்திய பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் நேற்று காலை ரஷ்யா புறப்பட்டார். ரஷ்யா சென்றடைந்த  பிரதமர் மோடியை அந்நாட்டின் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார்.ரஷ்ய விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்ய ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினுடன் 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். இதுவரை இந்தியாவிலும் ரஷ்யாவிலும் 21 ஆண்டு உச்சி மாநாடுகள் மாறி மாறி நடத்தப்பட்டுள்ளன. இந்த உச்சி மாநாட்டில்  ​இந்தியா – ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அரசியல் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.  

மோடி ரஷ்யா புடின்

3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள  மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது  என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுடன் உறவுகளை ஆழப்படுத்த இப்பயணம் அருமையான வாய்ப்பாக இருக்கும்.  இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரை சந்திப்பதை ஆவலுடன்  காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web