ஜூன் 28ம் தேதி ஈரானில் அதிபர் தேர்தல்? மசூதிகளில் கருப்புக்கொடி!
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பிய போது, மலைப்பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் பயணித்த வெளியுறவு அமைச்சர் ஹுசேன் அமிரப்துல்லாஹியன் உட்பட அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. அதிபர் ரைசி மரணத்திற்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டின் உச்ச தலைவர் காமனெயி அறிவித்துள்ளார்.இதனையடுத்து மசூதிகளில் கறுப்பு கொடி ஏற்றி துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

அதிபர் ரைசி மறைவுக்கு இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன. ஈரான் அரசியலமைப்பின்படி, அதிபர் இறந்தாலோ அல்லது பதவியை விட்டு வெளியேறினாலோ, அடுத்த தேர்தல் நடக்கும் வரை துணை அதிபர் இடைக்கால அதிபராக பொறுப்பேற்க வேண்டும். அதன்படி, தற்போதைய துணை அதிபர் முகமது முக்பரை இடைக்கால அதிபராக உச்ச தலைவர் காமனெயி அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.

முகமது மொக்பர் தேர்தல் நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்நாட்டு சட்டப்படி அதிபர் உயிரிழந்த அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் . இதன் அடிப்படையில் நீதித்துறை தலைவர், சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஜூன் 28ல் ஈரான் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் சுப்ரீம் தலைவர் காமேனி அனுமதி அளித்ததும் இந்த தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
