உடனடி அமல்... நாடு முழுவதும்... சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 41 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு!

 
மாத்திரை மருந்து
 

நாடு முழுவதும் சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் கோளாறு போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் உ ட்பட  41 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மருந்துகள் துறை மற்றும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆன்டாசிட்கள், மல்டி வைட்டமின்கள் மற்றும் ஆன்டிபயாடிக்ஸ் ஆகியவை மலிவு விலை மருந்துகளாகும். இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல்வேறு மருந்துகளின் விலை குறைப்பு குறித்த தகவல்களை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு தெரியப்படுத்த மருந்து நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருந்து, மாத்திரைகள்

அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக என்பிபிஏ-ன் 143வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் விலைக் குறைக்கப்பட்டதில், இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாத்திரை மருந்து

கடந்த மாதம், மத்திய அரசின் மருந்தியல் துறை, 923 மருந்துகளுக்கான வருடாந்திர திருத்தப்பட்ட உச்சவரம்பு விலைகளையும், 65 மருந்துகளுக்கான திருத்தப்பட்ட சில்லறை விலைகளையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web