திருவண்ணாமலையில் பதுங்கியிருந்த சாமியார் கைது... நெல்லை போலீசார் அதிரடி!

 
ராமையா

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி: தமிழக அரசு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஏர்வாடி அருகே உள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமையா என்ற ராமச்சந்திரன். இவரை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு ஏர்வாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ராமையா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
கைது

இதையடுத்து நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் உத்தரவுப்படி, நாங்குநேரி டிஎஸ்பி பிரசன்ன குமார் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ராமையா திருவண்ணாமலையில் சாமியாராக தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த ராமையாவை கைது செய்து நீதிமன்றம் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web