பிரதமர் நிவாரணத் தொகை அறிவிப்பு... பால விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

 
பால விபத்து


 
குஜராத்  மாநிலத்தில் இரு மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த  பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால்  ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில், இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார், ஒரு வேன், ஒரு ஆட்டோரிக்க்ஷா, மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மேலும் 4 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை கண்டறிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள்  தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  

மோடி


இந்த 43 ஆண்டு பழமையான பாலம், 1986-ல் கட்டப்பட்டது மற்றும் மத்திய குஜராத்தை சௌராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக இருந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உள்ளூர் மக்கள், காவல்துறை, தீயணைப்பு வீரர்கள், மற்றும் பேரிடர் மீட்புப் படைகள் உடனடியாக பணியில் ஈடுபட்டன. விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பாலத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்கு  காரணமான பராமரிப்பு குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.


பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் இருவரும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி  உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என  நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.   மேலும் பாலங்களின் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?