இன்று மாலை பிரதமர் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு... நேபாளத்தில் பதற்றம் தணியுமா?
நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வன்முறையாக மாறி வருகின்றன. இதனையடுத்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி, இன்று செப்டம்பர் 9, 2025 மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். “நிலைமையை மதிப்பீடு செய்து, பொருள் பொதிந்த தீர்வு காண பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். இதற்காக இன்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்துள்ளேன்,” எனக் கூறியுள்ளார்.

தலைநகர் காத்மாண்டுவில் ‘ஜென் இசட்’ இளைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறியதில், ஒரு பத்திரிகையாளர் உட்பட இருவர் உயிரிழந்தனர், மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, காவல்துறை கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதமர் சர்மா ஒலியின் ராஜினாமாவை கோரி, மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2008-ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னர், நேபாளத்தில் 13 அரசாங்கங்கள் மாறியுள்ளன. இது அரசியல் நிலையின்மை மற்றும் பொருளாதார பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு குறித்த அதிருப்தி அதிகரித்துள்ளது.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, நேபாள அரசு ராணுவத்தை களமிறக்கியுள்ளது. மேலும் காத்மாண்டுவின் முக்கிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
