கங்கையில் வழிபாட்டிற்கு பிறகு பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கல்!

 
மோடி

 இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல்  19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 26ம் தேதி 89 தொகுதிகளில் 2ம் கட்ட  வாக்குப்பதிவும்,  மே 7ம் தேதி 94 தொகுதிகளில் 3ம் கட்ட  வாக்குப்பதிவும், நேற்று மே 13ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவும் சுமுகமாக  நடைபெற்று முடிந்துள்ளது.அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் வரும் வாரங்களில் நடைபெறவுள்ளன. 5 ம் கட்ட வாக்குப்பதிவு மே20ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியாவின்  மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

மோடி


பிரதமர் மோடி அம்மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் தான்  இந்த முறையும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இந்த நிகழ்வில்  மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பிரதமருடன் செல்கிறார்கள்.  அதன்படி தமிழகத்தில் இருந்து  ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாரணாசி சென்றனர். மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உட்பட   பல்வேறு பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் வாரணாசி சென்றுள்ளனர்.

வேட்பு மனுத் தாக்கல்

பிரதமர் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகு அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார்கள் எனத் தெரிகிறது. முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தச அஸ்வமேத காட் பகுதியில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து மந்திரங்கள் ஒலிக்க  கங்கைக் கரை படித்துறையில் ஆரத்தியும் எடுத்து   கால பைரவர் கோயிலிலும் பிரார்த்தனை செய்கிறார். இதன் பிறகு  வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web