பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது அளித்து கௌரவம்!
இந்திய பிரதமர் மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்று நமீபியா சென்றிருந்தார். நமீபிய தலைநகர் விண்டோக்-கில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றார். 5 நாடுகள் பயணத்தின் நமீபியா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று அந்நாட்டு அதிபருடன் பிரதிநிதிகள் நிலையில் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிபர் நெடும்போ நந்தி – நதைத்வா முன்னிலையில், இந்தியா – நமீபியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அப்பொழுது, மருத்துவம், மருந்தாக்கம், எரிசக்திப் பாதுகாப்பு உட்பட துறைகளில், இருநாடுகளுக்கும் இடையே, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. மேலும், பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருது வழங்கப்பட்ள்ளது. ”Order of the Most Ancient Welwitschia Mirabilis” விருதை பிரதமர் மோடிக்கு, நமீபியா நாட்டின் அதிபர் வழங்கினார். இதுவரை 27 நாடுகளின் விருதுகளைப் பெற்ற மோடி, இந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 4 விருதுகள் பெற்றுள்ளார்.

முன்னதாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் ( விருதை, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவால் வழங்கி கௌரவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
