இன்று கார்கில் போர் 25ம் ஆண்டு.. நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்!

 
மோடி

இன்று கார்கில் போர் 25-ம் ஆண்டு வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கார்கில் சென்ற நிலையில், மறைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் வென்றதன் 25வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திராஸ் நகருக்கு சென்றார்.
 

இன்று காலை 9.20 மணிக்கு அங்குள்ள போர் நினைவுச் சின்னத்தில் கார்கிலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் விதவைகளுடன் பிரதமர் பேசினார். முன்னாள் ராணுவ தளபதி வி.பி.மாலிக், லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி, பிரிகேடியர் எஸ்.எஸ்.ஷெகாவத், கர்னல் சோனம் வாங்சுக், வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் தந்தை கிர்தாரி லால் பத்ரா உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மோடிஎல்லையில் துருப்புக்கள் செல்ல வசதியாக ஷிங்குன் லா சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் மோடி தொடங்கி வைக்கிறார். நிம்மு - படும் - தர்ச்சா சாலையில் 15,800 அடி உயரத்தில் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து வானிலை நிலைகளிலும் பயன்படுத்தப்படலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!