கோழைத்தனம்...’ ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

 
ஸ்லோவேக்கியா பிரதமர்

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான தாக்குதல் கோழைத்தனமானது, கொடூரமான செயல் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ (59) நேற்று தலைநகர் ப்ராகுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹாண்ட்லோவா நகரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது, பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 


அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேக்கியா பிரதமர்

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்லோவாக்கியா பிரதமர் எச்.இ. ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். ஸ்லோவாக்கியா குடியரசு மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web