ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை!
Jul 11, 2025, 10:35 IST
தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆடித் திருவாதிரை நட்சத்திர நாளான ஜூலை 27ம் தேதி ராஜேந்திர சோழன் பிறந்த நாள்.

ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர். தமிழ்நாடு அரசு சார்பில், ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு அரியலூரில் நடைபெறும் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் டெல்லியில் இருந்து வந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தததாகவும் கூறப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
