பிரதமர் மோடியின் பிரச்சாரத்தால் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்... ஆர்.முத்தரசன் பேட்டி!

 
முத்தரசன்

பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் இன்று  நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை கூறிய நிலையில் அந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

முத்தரசன்
தொடர்ந்து அவருக்கு இடைக்கால ஜாமீனை நீதிமன்றம் வழங்கி உள்ளது. மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கலாம் என தீர்ப்பளித்துள்ளது அந்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பங்கேற்கக் கூடாது என மத்திய அரசு அமலாக்க துறையை பயன்படுத்தி அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தது.
ஆளுங்கட்சிக்கு இருக்கும் முக்கியத்துவம் எதிர்க்கட்சிக்கும் உள்ளது என்பதை மத்திய பாஜக  அரசு சீர்குலைத்துள்ளது. இந்த சூழலில் தான் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்.
மக்களவைத் தேர்தலில் எந்த பிரதமரும் மோடி போல் தரம் தாழ்ந்த முறையில் பிரச்சாரம் செய்ததில்லை. மோடியின் பரப்புரை இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதை உறுதி செய்துள்ளது.
இது குறித்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தாலும் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பாமல் பாஜக கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எந்த தேர்தல் ஆணையமும் இது போல்  நடந்தது கிடையாது என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web