பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்... ரூ.3000 கோடிக்கு மேல் முதலீடு... செமத்தியான அறிவிப்புகள்!

 
செமிகண்டக்டர் கம்ப்யூட்டர் சிப்

செமிகண்டக்டர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். செமிகண்டக்டர் சிப்கள் இப்போது நம் அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத பொருளாகவே மாறி விட்டது. செமிகண்டக்டர் மின்சக்திக்கு எதிர்வினையாக இருக்கும் சில தனித்துவமான பண்புகள் கொண்ட ஒரு பொருள். இது மற்றொரு பொருளை விட ஒரு திசையில் மின்சார தற்போதைய ஓட்டம் மிகவும் குறைந்த எதிர்ப்பு கொண்ட ஒரு பொருள் உள்ளது. பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது செமிகண்டக்டர் தொடர்பான அறிவிப்புகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. குறிப்பாக செமி கண்டக்டர் இடம் பெற்றதற்கான காரணம் என்ன என்பதை இப்பொழுது காண்போமா.. 

மொபைல் போன்கள், மடிக்கணினிகள், டிவி, கார், ரயில்கள் போன்ற பல பொருட்களில் செமிகண்டக்டர் சிப்கள் மையமாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் செமிகண்டக்டர் சூழலை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை இந்தியாவுக்கு வழங்கினார். இந்தியாவில் செமிகண்டக்டர் சூழலை மேம்படுத்தும் விதமாக் ஜனவரி 1, 2022 அன்று, இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

கர்நாடக தேர்தல் மோடி

அமெரிக்காவில் பிரதமர் மோடி செமிகண்டக்டர்கள் தொடர்பாக வெளியிட்ட 3 அறிவிப்புகள், செமிகண்டக்டர்கள் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான நமது பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கலலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை உருவாக்க 2.75 பில்லியன் டாலர்களை (ரூ. 22,000 கோடிக்கு மேல்) முதலீடு செய்ய உள்ளது என்பது முதல் அறிவிப்பு. உலகின் 10 பெரிய செமிகண்டக்டர் நிறுவனங்களில் மைக்ரான் உள்ளது குறிப்பிடத்தக்கது 

இந்த தொழிற்சாலை கணினிகள், வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் நினைவகம் (Memory) மற்றும் சேமிப்பக (Storage) கருவிகளை  தயாரிக்கும். இதன் மூலம் நேரடியாக 5,000 பேருக்கும், மறைமுகமாக 15,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இரண்டாவது அறிவிப்பு, பெங்களூரில் செமிகண்டக்டர் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்கான கூட்டுப் பொறியியல் மையத்தை அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் அமைக்க உல்ளது. இதற்காக இந்த நிறூவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் (ரூபாய் 3,000 கோடிக்கு மேல்) முதலீடு செய்ய உள்ளது. அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் செமிகண்டக்டர் உபகரணங்கள், சேவைகள் மற்றும் மென்பொருளின் முன்னணி தயாரிப்பாளர் ஆகும்.

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சிப்

மூன்றாவது அறிவிப்பு, செமிகண்டக்டர் தொழிலுக்கான தொழில்நுட்பத்தை பயிற்றுவிப்பதற்காக லாம் ரிசர்ச் நிறுவனம் இந்திய செமிகண்டக்டர் இயக்கத்துடன் கைகோர்க்க உள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 60,000 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் நிறுவனத்தின் இன் “Semiverse” மூலம் ஆன்லைன் முறையில் பயிற்சியளிக்கப்படும்.

இந்த அறிவிப்புகள் முழுமையான செமிகண்டக்டர் சூழலை உருவாக்கும் இலக்கை அடைவதில் இந்தியாவிற்கு முக்கிய உறுதுணையாக இருக்கும்.

இந்தியாவில் செமிகண்டக்டர் தொழில்துறையை உருவாக்க கடந்த 40 ஆண்டுகளாக முந்தைய அரசுகள் முயற்சி செய்தன. இருப்பினும், இப்போதுதான், பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் விளைவாக, இந்தியாவின் கனவு நனவாகி வருகிறது. 

செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் நம்பகமான துணையாக இந்தியாவை முழு உலகமும் பார்க்கிறது வரும் காலங்களில் செமி கண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களில் முதலீட்டை சிறுக சிறுக மேற்கொண்டால் நீங்களும் கோடீஸ்வரரே!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

 

From around the web