மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக நேற்றிரவு காலமானார்.

டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் ஏற்கெனவே மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
