இன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக்குழு கூட்டம்!

 
மோடி தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக்குழு கூட்டம்

இன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

கடந்த மாதம் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடர் தொடங்கியதுமுதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

 ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. அமைச்சர் கிரண் ரிஜ்ஜு !  

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அதேவேளை, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 21ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் பேச்சுகள் உள்ளது. எனவே இது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?