இன்று உலக கோப்பையை வென்ற மகளிர் கிரிக்கெட் அணியினரை சந்திக்கிறார் பிரதமர் மோடி!
இன்று நவம்பர் 5ம் தேதி காலை, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களை தெரிவிக்கிறார்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி நவிமும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் அபார ஆட்டத்துடன் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து, உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

அணியின் வெற்றியை ஒட்டி நாடு முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பல அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை வெற்றி பெற்ற வீராங்கனைகளை பாராட்டும் பொருட்டு பிரதமர் மோடி இன்று நவம்பர் 5ம் தேதி அவர்களை சந்தித்து வாழ்த்தப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
