கவனம் ஈர்த்த பிரதமர் மோடி அணிந்த வாட்ச்... 1947ல் வெளியான 1 ரூபாய் நாணயத்தால் வடிவமைக்கப்பட்ட சிறப்பு மாடல்!

 
மோடி வாட்ச்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கைக்கடிகாரம் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர வருடமான 1947ல் வெளியான ஒரு ரூபாய் நாணயத்தை டயலாகக் கொண்டு இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கட்டுமானம் மற்றும் தொழில்நுட்பம்:

ஜெய்ப்பூரில் செயல்படும் ஒரு வாட்ச் நிறுவனம் இந்த கைகடிகாரத்தை தயாரித்துள்ளது. ‘ரோமன் பாஃக்’ எனப்படும் இந்த மாடல், இந்திய பாரம்பரியத்தையும் நவீன வடிவமைப்பையும் இணைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 43 மில்லி மீட்டர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்ட இந்த வாட்சின் உள்ளே காணப்படும் நாணயம், சுதந்திர ஆண்டின் நினைவாக சேர்க்கப்பட்ட முக்கிய அம்சமாகும்.

இந்த நாணயத்தின் மேல் உள்ள நடக்கும் புலி சின்னம் டயலின் மைய வடிவமாக அமைந்துள்ளது. முழு டயலும் வெள்ளி நிறத்தில் அமைந்ததால் வாட்ச் எளிமையான தோற்றத்துடன் பிரீமியம் உணர்வையும் தருகிறது. கண்ணாடி பகுதியில் சப்பைர் கிறிஸ்டல் பயன்படுத்தப்பட்டிருப்பது, வாட்சை அதிகம் நீடிக்கும் வகையில் பாதுகாக்கிறது. இந்த வாட்சில் ஜப்பானிய மியோட்டா ஆட்டோமெட்டிக் இயந்திரம் இடம்பெற்றுள்ளது. தினசரி பயன்படுத்தும் வகையில் இதன் நீர்ப்பாசிப்பு திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாட்ச்

விலை மற்றும் சந்தைப்படுத்தல்:

வாட்சின் விலை சுமார் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடி அந்நாட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை, சர்வதேச பிராண்டுகளை விட உள்ளூர் நிறுவனத்தின் வாட்சைத் தேர்வு செய்திருப்பது, இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு முயற்சிக்கு அவர் வழங்கும் ஆதரவை மீண்டும் ஒருமுறையாக சுட்டிகாட்டியுள்ளது. இந்த வாட்சை அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்ததுடன், அது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்களிடையே வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடி “ரோமான பாக்” அணிவது, அழகான அணிகலனாக மட்டுமல்ல; இந்திய கலையின் மற்றும் தனித்துவத்தின் பிரதிநிதியாகவும் காட்சியளிக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!