பிரதமர் திடீர் ராஜினாமா... பரபரக்கும் அரசியல் வட்டாரம்...!!

 
அண்டோனியா

 போர்ச்சுக்கல் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அவரது   இல்லத்தில் திடீர் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும்  போலீசார் அவரது தலைமை அதிகாரியை கைது செய்தனர்.   அன்டோனியோ கோஸ்டா 2015  முதல் பிரதமர் பதவியை வகித்து வருகிறார். அடுத்தடுத்து 2 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் நாட்டில் உள்ள லித்தியத்தை பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

அண்டோனியா
 ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக அவரது தலைமை அதிகாரி விட்டோர் எஸ்காரியா கைது செய்யப்பட்டுள்ளதாக  போர்ச்சுகலின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.இது குறித்து   போர்ச்சுகல் அரசு வழக்கறிஞர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  விசாரணையின் ஒரு பகுதியாக பிரதமரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும்   பிரதமரின் இல்லம் தவிர சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகங்களில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.  

அண்டோனியா

பிரதமர் கோஸ்டாவின் தனிப்பட்ட ஆலோசகர் டியோகோ லாசெர்டா, சைன்ஸின் சோசலிச மேயரான நுனோ மஸ்கரென்ஹாஸ் ஆகியோரும்  போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளது.  பிரதமர் இல்லத்தில் சோதனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரதமர் கோஸ்டா, போர்த்துகீசிய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசாவை அதிகாரப்பூர்வமாக சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.  அவரை சந்தித்து விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் பிரதமர் கோஸ்டா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web