மோடி பதவியேற்பு விழா... ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்டிற்கு சிறப்பு அழைப்பு!

 
 சுரேகா யாதவ்

மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். வரும் 9ம் தேதி டெல்லியில் நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட் சுரேகா யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சதாராவைச் சேர்ந்த சுரேகா யாதவ், 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில்வே ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார். இவரது சாதனைகளுக்காக பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை பெற்றுள்ளார்.

அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையையும் சுரேகா யாதவ் பெற்றுள்ளார். தற்போது, ​​மராட்டிய மாநிலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் சோலாப்பூர் இடையேயான வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்வேயை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web