நெகிழ்ச்சி... சிறை உணவகத்தில் தவறவிட்ட கைப்பையை திரும்ப கொடுத்த சிறைக்கைதிகள்!

 
ஸ்ரீகங்கா

 மதுரை மத்தியச்சிறையில்   அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் மறுவாழ்வுக்கு ஏற்ப பணிகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.  அந்த வகையில் அவர்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகளை கொண்டு உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலாப்பயணிகள், அந்தப்பகுதிவாசிகள் அனைவரும் வாங்கி செல்லும் வகையில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா  குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். சிறைவாசிகளின் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய சிறை கண்காணிப்பில் உள்ள பெட்ரோல் நிலையம், சிறைச்சந்தை ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

மதுரை சிறை

இதற்காக சிறைக்கைதிகளுக்கு தனி  ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய சிறை சார்பில் நடத்தப்படும் உணவகங்களில் தினமும் ஏராளமானோர் உணவருந்தி செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக சிறைச் சந்தை காணப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான சிம்டா சீனிவாஸ் அவரது மனைவி ஸ்ரீகங்கா ஆகியோர் குடும்பத்தினருடன் தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்தனர்.   மதுரையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட்டு பின் மத்திய சிறையில் செயல்பட்டுவரும் சிறை சந்தையை பார்வையிட்டனர். அதன் பின் அங்கு காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பிவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் அமர்ந்து சாப்பிட்ட மேஜையின் அருகே ஒரு கைப்பை இருந்ததை சிறைவாசிகள் கண்டறிந்தனர்.  தண்டனை சிறைவாசி கார்த்திக் அந்த கைப்பையை எடுத்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

அதில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.  அவர்களுடைய ஆதார் தவிர தொடர்பு எண்கள் இல்லாததால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தனது கைப்பையை எங்கு தவறவிட்டோம் எனத் தெரியாமல் பல இடங்களில் தேடி அலைந்த பின்னர்  கடைசியாக மதுரை மத்திய சிறை சந்தைக்கு வந்தனர்.   உரிய விசாரணைக்கு பிறகு அவர்களிடம் கைப்பை திரும்ப வழங்கப்பட்டது. இதனை மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக் கொண்டனர். அத்துடன் தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web