ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து.. 6 பள்ளி மாணவிகள் படுகாயம்!

 
மேல் பள்ளிப்பட்டு

செங்கம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது தனியா பேருந்து மோதியதில் பள்ளி மாணவிகள் 6 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவிகள் ரஷியா, நஸியா, ஆயுஷா, சுமித்ரா, சுஜிதா, மற்றும் பத்தாம் வகுப்பு மாணவி லாவண்யா ஆகியோர் கட்டண ஆட்டோவில் மேல் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்தனூர் அருகே  ஆட்டோவில் இருந்து ஒருவரை இறக்கி விட சாலையோரம் நிறுத்திய போது செங்கத்தில் இருந்து நீப்பத்துறை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதியதில் பள்ளி மாணவிகளுக்கு காயம் ஏற்பட்டு மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த மேல் செங்கம் காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web