தனியார் பேருந்து தலைக்குப்புற வயலில் விழுந்து கோர விபத்து.. பயணிகளுக்கு நேர்ந்த சோகம்!

 
முடிகொண்டான் விபத்து

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனியார் பேருந்துகள் மற்ற பேருந்துகளுடன் போட்டி போட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஓட்டி மற்ற வாகனங்களை அச்சுறுத்தி அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த இரண்டு தனியார் பேருந்துகள் சாலையில் போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்துள்ளன.

அப்போது, திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் பகுதியில் தென்குடி ஆர்ச் என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று சாலையை விட்டு விலகி வயலில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. மற்றொரு தனியார் பேருந்து வேகமாக புறப்பட்டது.

இந்நிலையில், வயல்வெளியில் விழுந்த தனியார் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லேசான காயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நன்னிலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!