தனியார் பேருந்து கட்டண உயர்வு... தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

 
தனியார் சொகுசு ஆம்னி பேருந்து தனியார் சொகுசு ஆம்னி பேருந்து

டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தனியார் பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையில் பல மாதங்களாக தமிழக அரசு முடிவு எடுக்காததை எதிர்த்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில், தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில், அதிகரித்த எரிபொருள் செலவுகள், உதிரிபாக விலை உயர்வு, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட காரணங்களால் தற்போதைய கட்டணத்தில் சேவையை நடத்துவது கடினமாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கான கட்டண திருத்த கோரிக்கை அரசிடம் முன்கூட்டியே சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.

ஆம்னி

அரசு தரப்பு இதற்கு பதிலளித்த போது, தனியார் பேருந்து கட்டண உயர்வு குறித்த அனைத்து பிரிவுகளின் கருத்துகளும் பெறப்பட்டுள்ளன; இது குறித்து வரும் டிசம்பர் 30ம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது. முடிவு எடுக்கப்பட்டதையடுத்து விரிவான அறிக்கை ஜனவரி 5ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் அரசுத் தரப்பு உறுதியளித்தது.

koyambedu bus stand ஆம்னி பஸ்

இரு தரப்புகளின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசுத் தரப்பின் நேரக் கெடுவை பதிவு செய்து, குறிப்பிட்ட தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!