இனி கேரளாவுக்கு தனியார் பேருந்துகள் செல்லாது... ஆம்னி பேருந்து சங்கம் அறிவிப்பு!

 
ஆம்னி

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் இனி சேவையை நிறுத்த உள்ளன என்று மாநில தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கேரள போக்குவரத்து துறையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் திடீரென நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவை ஒவ்வொன்றுக்கும் மொத்தம் ரூ.70 லட்சம் வரை அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

இந்த நடவடிக்கையால் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் நடுவழியிலேயே இறக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறப்பட்டது. இதன் பின்னணியில், தங்களின் பேருந்துகளை கேரளாவிற்கு அனுப்ப முடியாது என சங்கம் அறிவித்துள்ளது.

koyambedu bus stand ஆம்னி பஸ்

இதில் இரு மாநில அரசுகளும் தலையிட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது. பயணிகள் இடையே பெரும் குழப்பம் நிலவுகின்ற நிலையில், வரவிருக்கும் விடுமுறை சம்பந்தப்பட்ட பயணங்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க