தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் ஏசி, பீரோ, மின்விசிறி, இன்வெர்ட்டர், பைக்குகள் சூறை!!

நாளை நவம்பர் 12ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பலரும் தீபாவளி பண்ட் சீட்டு கட்டியுள்ளனர். அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானாவில் பல கோடி ரூபாய் வசூலித்த பிரபல சிட்பண்ட் நிறுவனம் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கவில்லை. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்த சிட்பண்ட் நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, தொழிலாளர் தினங்களுக்கு ரூ.100 முதல் ரூ.5,000 வரையிலான சீட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் பட்டாசு, இனிப்பு, மளிகை பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் தங்க நாணயங்கள் என 4 மடங்காக திருப்பி வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 20 கிளை நிறுவனங்களில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட கிளை நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் பேர் மாதச்சீட்டு செலுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
தற்போது தீபாவளிக்குக்கு பட்டாசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று காலை 7 மணி அளவில் செய்யாறில் சிட்பண்ட் நிறுவன தலைமை அலுவலகம் முன்பு சுமார் 300 பேர் திடீரென திரண்டு வந்து சூறையாடத் தொடங்கினர். அவர்களை பார்த்தவுடன் இரவு காவலர்கள் பயந்து ஓடிவிட்டனர். அலுவலகத்திற்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, நாற்காலிகள், டிவி, இன்வெர்ட்டர் பேட்டரிகள், பைக்குகள் என அனைத்தையும் அள்ளிச்சென்றனர். சில பொருட்களை உடைத்து சூறையாடிய கொடூரமும் அரங்கேறியுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள அந்த நிறுவன மளிகை கடைக்கு வெளியே இருந்த பொருட்களையும் சந்தடி சாக்கில் தூக்கி சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!