ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்... ரூ50 லட்சம் கடனால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை!
அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 36 வயது மணிவாசகன். ஓசூர் 2வது சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அருணா. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் விசாகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இதில் மணிவாசகன் தனது குடும்பத்தினருடன் ஓசூர் தோட்டகிரி பகுதியில் வசித்து வந்தார். மணிவாசகனுக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருந்ததாக தெரிகிறது. அவர் அதிக நேரம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் ஊருக்கு சென்ற மனைவி அருணா நேற்று காலை தனது கணவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுத்து பேசாததால் அச்சமடைந்ததால் அருகே வசிப்பவர்களுக்கு போன் செய்து தங்கள் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறினார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் சென்று பார்த்தபோது மணிவாசகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இதுகுறித்து உடனடியாக மணிவாசகத்தின் மனைவி, ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிவாசகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு மேஜையில் மணிவாசகன் தனது குடும்பத்தினருக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து விட்டேன். மேலும் ரூ.50 லட்சம் வரை கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என அந்த கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
