கீழே விழுந்து நொறுங்கிய தனியார் விமானம்.. 2 பேர் பரிதாப பலி!

 
பிரேசில் விமானம்

பிரேசிலின் சான்டா கேட்டரினோ மாகாணத்தில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தனியார் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கவர்னர் வல்லடரேஸ் நகரில் இருந்து நேற்று மாலை சாண்டா கேடரினா தலைநகர் புளோரியானோபோலிஸ் நகருக்கு புறப்பட்டது. இது இட்டாபோவா நகரை நெருங்கியதும், அவசரமாக தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.

ஆனால் விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது, ​​விமான நிலையத்திற்கு அப்பால் உள்ள மரங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானி ஏன் ஜாயின்வில்லி விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு ஏன் அவசரமாக தரையிறங்க முயன்றார்? என விமானப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web