தனியார் பள்ளி உணவு விவகாரம்.. மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 
தனியார் பள்ளி மாணவர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல் நேற்று 8 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்போது அவர்களுக்கு தலைசுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கல்வா நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று 38 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மதிய உணவு

இந்நிலையில், இன்று அதிகாலை மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 45 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து மாணவர்களும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சாதாரணமாக இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் அனிருதா மல்கோன்கர் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web