சூப்பர்... அரசு பேருந்துகளில் நடத்துனர்களுக்கு பரிசு... அதிரடி அறிவிப்பு !

 
ஓட்டுனர் நடத்துனர்


 
தமிழகம் முழுவதும்  அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்டேட் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்  தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் அரசு விரைவு பேருந்துகளில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் க்யூ ஆர் கோடு மூலமாக டிக்கெட் விற்பனை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பேருந்து யுபிஐ

இந்தியா  முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் அது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதனையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பல்வேறு துறைகளிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் அரசு விரைவு பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டது.

யுபிஐ

தற்போது அரசு போக்குவரத்து கழகம்  இது குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் நடத்துனர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.   அரசு விரைவு போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கு பரிசு தொகையுடன் சேர்த்து சான்றிதழ்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web