‘பொதுமக்களிடம் OTP பெற தடை.’... ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
தமிழ்நாட்டில் திமுக கட்சி “ஓரணியில் தமிழ்நாடு” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க முயற்சி செய்கின்றனர். ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கைக்காக மக்களிடம் அவர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் OTP ஒரு முறை கடவுச்சொல் மற்றும் சில சமயங்களில் ஆதார் விவரங்களையும் கேட்கின்றனர்.

இதை எதிர்த்து, சிவகங்கையில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி ”OTP மற்றும் ஆதார் விவரங்களை கேட்பது மக்களின் தனியுரிமையை மீறுவதாகவும், இது அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது எனவும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஓரணியில் தமிழ்நாடு மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால், OTP கேட்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க அறிவுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தை வழக்கில் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
