கடற்கரைக்கு செல்ல தடை... கலெக்டர் திடீர் உத்தரவு!

 
தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை
 


தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆட்சியா் கோ. லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பாா் வரையிலான கடற்கரைக் கிராமங்களில் இன்று ஜூன் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டா் முதல் 2.7 மீட்டா் உயரத்துக்கு பேரலைகள் எழக்கூடும் எனவும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

எனவே, பொதுமக்கள் கடற்கரைகள், கடற்கரை அருகேயுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கிக் குளிக்கவோ கூடாது. மேலும், மன்னாா் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலோரக் கிராமங்களைக் கண்காணித்து, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web