இன்று முதல் 6 நாட்களுக்கு 144 தடை உத்தரவு .. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் செப்டம்பர் 11 ம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி மற்றும் சமூக சமத்துவத்திற்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இந்நிகழ்வில் பரமக்குடியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொள்வர்.

இதனை முன்னிட்டு, அந்த நாளில் பரவலான மக்கள் திரளும், அரசியல் நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புள்ளதால், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது சவாலாக இருக்கும். இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்த விடுமுறையால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 20 ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் செப்டம்பர் 15 ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்டோபர் 25 முதல் 31 ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
