சொத்து தகராறு.. சொந்த அக்காவை கொடூரமாக கோடரியால் தாக்கிய தம்பி.. வீடியோ வைரல்!

 
மகாபூபி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கர்லாடின்னே மண்டல் பெனகசெர்லா கிராமத்தில் செவ்வாய்கிழமையன்று வீட்டில் தகராறு காரணமாக ஒருவர் தனது சொந்த மூத்த சகோதரியை மரம் வெட்டும் கோடரியால் தாக்கினார். இதனால் அந்த பெண் பலத்த காயம் அடைந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.அந்த வீடியோவில், “ஜிலானி என்ற நபர் தனது சொந்த மூத்த சகோதரி மக்காபூபியை விறகு வெட்டும் கோடரியால் கொடூரமாக கொன்றார். அருகில் இருந்த ஒரு பெண் அவரைத் தடுக்க முயன்றாலும், ஜிலானி அக்காவை பலமுறை தாக்கினார். மேலும், மகாபூபி கோடரியைத் தடுக்க முயற்சித்தார். இருப்பினும், ஜிலானி  கால்களையும் தலையையும் பிடித்து  தாக்கினார்”.

இதனால், பலத்த காயமடைந்த மகாபூபி, அனந்தப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், கோடரியால் தாக்கிய ஜிலானியை அனந்தப்பூர் போலீஸார் கைது செய்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த சில மாதங்களாக மகாபூபி வசித்த வீடு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு தனது மூத்த சகோதரி மகாபூபியை ஜிலானி மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜிலானி செவ்வாய்க்கிழமை தனது சகோதரியை கோடரியால் கொடூரமாக தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், தனது சொந்த சகோதரியை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெனகசெர்லா கிராமத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web