சொத்து தகராறு.. தொழிலதிபர் வெட்டி படுகொலை.. போலீசார் தீவிர விசாரணை!

 
கொலை

தென்காசி மாவட்டம்  , ஆழ்வார்குறிச்சி, அச்சங்குளம்,  அந்தோணியார் தெருவில் வசித்து வருபவர் அருள். இவரது மகன் இருதயராஜ் என்கிற சொக்கன். இவர் அத்தாரியனூர் அச்சுங்குளத்தில் மீன்குளத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். இதன் காரணமாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட குளத்தை பெரும்பாலும் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் காவலில் இருந்தார்.

அப்போது, ​​அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் இருதயராஜை வெட்டிக் கொன்றனர். அவரது தலையை வெட்டி கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார், இருதயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கொலை நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இருவேறு முன்விரோதம் காரணமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். குற்றவியல் வழக்கில் தொடர்புடைய மாயாண்டி என்ற நபர் நீதிமன்ற வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார், அவரது கிராமத்தில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சட்டக் கல்லூரி மாணவிக்கும் பகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பகையை பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடந்துள்ளது. பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசியில் ஒருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!