சொத்து தகராறு.. குடிபோதையில் அத்துமீறிய மகனை சுத்தியால் அடித்தேக் கொன்ற தந்தை கைது!

 
செல்வராஜ்

புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தான்கோட்டை வாடிகாடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (56) என்பவரைக் காணவில்லை. இவர் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இன்பரசன் (24), இயலரசன் (20) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவரது மூத்த மகன் இன்பரசன், இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். மூன்று மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

மதுபோதை

இதையடுத்து, சொத்தில் பங்கு கேட்டு தந்தை செல்வராஜிடம் அடிக்கடி குடிபோதையில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு செல்வராஜ் தனது நண்பர் உலகநாதன் (65) வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நேரத்தில் தந்தை செல்வராஜை தேடி இன்பரசன் அங்கு வந்துள்ளார். மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு செய்துள்ளார்.

அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை செல்வராஜ் மற்றும் அவரது நண்பர் உலகநாதன் ஆகியோர் இன்பரசன் தலையில் சுத்தியலால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இன்பரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸார், உயிரிழந்த இன்பரசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அறந்தாங்கி போலீஸார் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை

அதில், சொத்துத் தகராறில் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக செல்வராஜ் கூறியதையடுத்து, போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளைச் சிறையில் அடைத்தனர். சொத்து தகராறில் தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்த மகனை நண்பருடன் சேர்ந்து தந்தையே கொன்ற சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web