அதிர்ச்சி... தந்தை மரணத்திலும் சொத்து தகராறு.. இளையமகன் செய்த கொடூரம்!

 
கணேசன்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 3 மகன்கள், முதல் மகன் ரகுராமன் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார். கடைசி மகனான சீதாராமனும், அண்ணன் ரகுராமனுடன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரகுராமனின் தந்தை கணேசன் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் பேச்சாவாடி பகுதியில் திருமண மண்டபம்  ஒன்றைக் கட்டியதாக கூறப்படுகிறது.

சகோதரர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போது, ​​வயதான கணேசன், தனது மனைவி பானுமதி பெயரில் இந்தத் திருமண மண்டபத்தை உயில் செய்து கொடுத்திருந்தார். ஆனால், அதற்கு சம்மதிக்காமல் 7 ஆண்டுகளாக திருமண மண்டபத்தை ஆக்கிரமித்த இளைய மகன் சீத்தாராமன், கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கணேசன் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

இறப்பதற்கு முன் தான் கட்டிய திருமண மண்டபத்தில் உடலை வைத்து எடுத்து செல்ல வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. தந்தையின் இறுதிச் சடங்கிற்காக வந்திருந்த சீதாராமனிடம் இதைத் தெரிவித்த போது, ​​அவரும் ஏற்று இறுதிச் சடங்கில் பங்கேற்றார். பின்னர், கணேசனின் உடலை வீட்டில் இருந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மணிமண்டபம் முன் வந்த போது, ​​சீதாராமன் மண்டபத்தை பூட்டிவிட்டு உடலை உள்ளே செல்ல விடாமல் செய்துள்ளார்.

இதையடுத்து கணேசனின் உடலை அவரது மூத்த மகன் ரகுராமன் எடுத்து சென்று மண்டபத்தின் வாசலில் வைத்து விட்டு போலீஸாருக்கு தகவல்  கொடுத்தார். இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீதாராமனிடம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, சீதாராமன் ஏற்றுக் கொண்டதையடுத்து, கணேசனின் உடல் திருமண மண்டப வளாகத்தில் அரை மணி நேரம் வைக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது. திருமண மண்டப வாசலில் கணேசனின் உடல் வைக்கும் சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web