மசாஜ் சென்டரில் விபச்சாரம்... 3 இளம்பெண்கள் மீட்பு!

 
விபச்சாரம்

மசாஜ் செண்டரில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். தூத்துக்குடி அழகு நிலையத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக குமரியைச் சேர்ந்த கடை மேலாளரை போலீஸார் கைது செய்தனர். தூத்துக்குடி கணேஷ்நகர் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்துவதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் போலீசார் கணேஷ்நகர் சென்றனர்.

'ஸ்பா' என்ற பெயரில் இயங்கி வரும் அழகு நிலையத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது தெரியவந்தது. இதையடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த புதுச்சேரி, திருப்பூர், வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து 3 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
கைது

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த அழகு நிலைய மேலாளர் சேவியர் சிபு (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு நிலைய உரிமையாளர் பால்ராஜை (43) தேடி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web