வங்கதேச போராட்டம் எதிரொலி.. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு!

 
வங்கதேசம்

வங்கதேசத்தில் கடந்த 15-ந்தேதி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆளுங்கட்சி மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரிகளும் போராட்டத்தில் குதித்தனர். மாணவர் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசம் வன்முறை

இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான இஸ்லாமிய சதாரா ஷிபிர் என்ற ஜமாத்-இ-இஸ்லாமி மாணவர் அமைப்பிற்கு தடை விதித்து வங்கதேச அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது,  அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று கூறியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web