இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

 
மதிப்பெண்


10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலை மற்றும் தொழிற் கல்வி பாடப்பிரிவுகளில் சேர ஏதுவாக இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் கடந்த 10-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. மாநிலக் கல்வி திட்டத்தில் மொத்தம் 8,94,264 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அதில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 % ஆகும். இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலை மற்றும் தொழிற் கல்வி பாடப்பிரிவுகளில் சேர ஏதுவாக இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழ்


இதனைத் தொடர்ந்து இன்று முற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து அனைத்து மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD- ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் Provisional Certificate பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், அச்சான்றிதழ்களில் விவரங்களைச் சரிபார்த்து , தலைமையாசிரியரின் உள்ள கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டுத் இன்று முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்
மாணவர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல தனித்தேர்வர்களும் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உரிய மதிப்பெண் பட்டியலை Statement of Marks தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web